Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

தமிழக மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை: தமிழிசை சவுந்தரராஜன்!


மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையறிந்த தமிழக அரசு நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்களிக்க வேண்டும் என்று அவரச சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில், மற்றும் துவரம் பருப்பு சரிவர கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வை தமிழக மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். இதுதான் தமிழக பாஜகவின் நிலைபாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு என்பது தேசிய அளவில் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வு ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை 12 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் இதுவரை மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் நீட் தேர்வு வந்தால், அதற்காக மாணவர்கள் தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக மருத்துவர்களாக, பணக்காரர்களாக இருக்கும் மாணவர்களுடன்,   ஏழை எளிய மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும்.

இதனால் பொருளாதாரத்தில் முன்னேறிய, நன்கு வாய்ப்புகள் பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆக முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.