Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

தமிழக பிஜேபி தலைவராகிறார் ரஜினி- அமித் ஷா போடும் புது திட்டம்!


ரஜினி பி.ஜே.பியில் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா,  பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். ரஜினியும் மார்ச் மாதம் ஒரு மாநாட்டை கூட்டி பார்க்க வேண்டும் என்று முடிவில் உள்ளார்.

எல்லாம் சரியாக இருந்தால் தமிழக பிஜேபியின் தலைவராக ரஜினி அமர்வார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிக்கும் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. ஆனாலும், யாரை நம்பி இறங்குவது, கை காசை செலவு செய்வதா? என்றெல்லாம் யோசித்தே காலங்களை கடத்திய ரஜினிக்கு இப்போ வாய்ப்பு வீடு தேடி வருகிறது.

அதை பயன்படுத்தாமல் விட்டு விடப்போவதில்லை தலைவர் என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்ற தலைவர்கள். எப்படியோ, ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை ஆரம்பமாகி விட்டதாம்.

தமிழகத்திற்கு யாரும் தலைவர்கள் இல்லை என்ற நிலையில், ரஜினி தலைமையில் பிஜேபி என்றால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று ஆசைப்பட்டு கொண்டு இருக்கின்றனர் பிஜேபியினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.