முதல்வராக பதவியேற்கவுள்ள சசிகலாவை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து வருகிறார். அவருடன் உயர் அதிகாரிகளும் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். போயஸ் கார்டனில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளார்.
அதிமுக சட்டசபைக்குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் 9ஆம் தேதிக்குள் முதல்வராக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சசிகலாவுன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவீன் வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அரசு உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பதவியேற்பு விழா குறித்து சசிகலா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.