Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த தம்பித்துரை திடீரென அமைதியானது ஏன்?


தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில், ஆளும் கட்சி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போது வரை ஓ.பன்னீர் செல்வத்திற்கு 11 எம்.பிக்களும், 7 எம்.எல்.ஏக்களும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். சசிகலா அணியில் தம்பித்துரை முதன்மையானவராக இருந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக அவரை சசிகலா அணி நிர்வாகிகளுடன்  காணமுடியவில்லை.

பாராளுமன்ற அ.தி.மு.க. குழுத்  தலைவரான தம்பித்துரை டெல்லி அரசியலை சசிகலா சார்பில் மேற்கொண்டு வந்தார். ஆனால்  டெல்லியில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக  அமையவில்லை என்று சசிகலா அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

இதனால் அவர் திடீரென அவர் ஓரம் கட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர் சசிகலா அணியினர் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் அமைதியாகி விட்டதாக தெரிகிறது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில்  சசிகலா புதிய கடிதத்தை பிரதமர் மோடியை சந்தித்து தம்பித்துரையால் கொடுக்க இயலவில்லை. இதனால் அவர் அ.தி.மு.க.வின் தீவிர செயல்பாடுகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தம்பிதுரை, ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கயிருப்பதாகவும் ஒரு  தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனுக்கு அவைத் தலைவர் பதவியும், திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியும் அளிக்கப்பட்டதில் அதிருப்தியாக உள்ள தம்பிதுரையை பாஜக தன் பக்கம் இழுத்துவிட்டதாகவும் அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.