Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 16, 2017

முதல்வராக இருப்பதால் எனக்கே முதல் சான்ஸ் தர வேண்டும்.. ஓ.பி.எஸ். பிடிவாதம்


நான் தற்போது முதல்வராக இருப்பதால் எனக்கே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று பொறுப்பு ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளதாக தெரிகிறது.


மிகவும் பலவீனமான நிலையில்தான் ஓ.பி.எஸ் தரப்பு உள்ளது. மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாக கூறுகிறது. ஆனால் கூவத்தூரில் உள்ளவர்களை சுதந்திரமாக வெளியே விட்டால், சட்டசபையில் எனக்கே அவர்கள் ஆதரவு தருவார்கள் என்று ஓ.பி.எஸ் தரப்பு கூறு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தான் முதல்வராக இருப்பதால் எனக்கே முதலில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதை ஆளுநர் ஏற்பாரா அல்லது எடப்பாடிக்கு வாய்ப்பளிப்பாரா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.