Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

அண்ணா தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார்!


வாகரை அம்பந்தாம்வெளி விநாயகமூர்த்தி பிரேமகாந்த் திட்டமிட்ட வகையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றும் அவரது தங்கை தெரிவித்துள்ளார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தாம்வெளி கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விநாயகமூர்த்தி பிரேமகாந்த் இறப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எங்களது அண்ணா பிரேமகாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர் ஒரு கோளை இல்லை எனவும், இவரோடு இருந்தவர்கள் அவரை அழைத்து சென்று திட்டமிட்ட வகையில் கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவரோடு இருந்தவர்கள் பொய்யான வார்த்தைகளைக் கூறி இவரை அழைத்துச் சென்று அடித்து விட்டு கிணற்றுக்குள் போட்டதுடன், உடல் மேலே வரக்கூடாதென்ற வகையில் கல்லைக் கட்டி போட்டுள்ளனர்.
அண்ணாவை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்தோம் மூன்று நாட்கள் கழித்து வந்து விசாரணை நடத்திச் சென்றனர். கண்டுபிடித்தாள் சொல்லுங்கள் என்று எங்களிடம் சொல்லி சென்றனர்.
அண்ணாவின் சடலம் இருந்த காணி உரிமையாளர்கள் எங்களிடம் தெரியப்படுத்தினர். பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்த போது அவர்கள் வந்து விசாரணை நடாத்தினார். அதுவரைக்கும் விசாரணைகள் செய்தார்களாக என்பது பற்றி எங்களுக்கு சந்தேகமாகவே உள்ளது.
எனவே நல்லாட்சி அரசாங்கம் கொலையாளியை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி எங்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத் தருமாறு வேண்டுகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.