February 23, 2017
ஊரைவிட்டே ஓடிப் போறேன்னு சொன்ன திருநங்கை கமல் : சு.சாமி சவடால்
அரசியல்வாதிகள் எப்போதுமே மிகத் தரம் தாழ்ந்து பேசுவார்கள் என்பது நாடறிந்த கதை. காமராஜர்,அண்ணா,எம்ஜிஆர், போன்றவர்களுக்கு பிறகு போதுமேடைகள் சாக்கடையாகிப் போனது.
தீப்பொறி ஆறுமுகம்,வெற்றி கொண்டான் போன்ற திமுக பேச்சாளர்கள் இரட்டை அர்த்த வசனங்களை பேசி தொண்டர்களை கவர்கிறேன் என்று கொச்சை பேச்சு பேசினார்கள். அதை ரசிக்கவே ஒரு கூட்டமும் இருந்தது.
தலைமை கண்டிக்கவே இல்லை, ரசித்தது. ஆனால் கமல் பண்பட்ட நடிகர். உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்கள் அதிகம்.மதிப்பு மிகு கலைஞன்.
செங்கோட்டையன் தனது டுவிட்டரில் ஜெயலலிதாவை தாக்குப் பிடிக்க முடியாமல் நாட்டைவிட்டே ஓடிபோகிறேன் என்று சொன்ன பேடி கமலஹாசன் என்று கூறினார். சு.சாமி முதுகெலும்பே இல்லாத திருநங்கை கமலஹாசன் என்று டுவிட்டினார்.
இதைப் பார்த்து கொதித்த கமல் “எலும்பே இல்லாத உணவு சு.சாமிக்கு மிகவும் பிடிக்கும் போல அதை அவர் சுவைத்து சாப்பிடலாம் என்று கூற,”அதன்’ அர்த்தம் புரிந்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போனார்கள்.
சமூகவலைத் தளங்களில் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சு.சாமி சாக்கடை என்பது உலகிற்கே தெரியும். ஆனால் அதற்கு கமல் இவ்வளவு கொச்சையான பதில் கொடுத்திருக்க கூடாது என்கிறார்கள்.
கமல்ஹாஸனின் இன்றைய ட்விட்டர் அரசியல் போர் ஆரம்பமாகிவிட்டது. ஒரு பக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் சுப்பிரமணியசாமி என இரு முனைத் தாக்குதல்கள் அவரை நோக்கி.
இரண்டு தரப்புக்குமே சளைக்காமல் பதில் கூறி வருகிறார் கமல். இது எதோ நாடகமா அல்லது உண்மையாகவே சண்டையா என்று ஒரு தரப்பு குழம்பிக் கிடக்கிறது.
ஊரைவிட்டே ஓடிப் போறேன்னு சொன்ன திருநங்கை கமல் : சு.சாமி சவடால்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.