Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம்: தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரதப் போராட்டம்


கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரிய திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து இன்று (புதன்கிழமை) திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
திருச்சி, தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 8.50 மணியளவில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, இளைஞர் மற்றும் பொதுமக்களுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், திமுக நிர்வாகிகளோடு ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.



திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பெண்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன் 

காஞ்சிபுரத்தில் துரைமுருகன் பங்கேற்பு 
காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன் பங்கேற்கிறார். அவரின் தலைமையில் காஞ்சிபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ''எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கு தீர்மானமே தவறு. அரபு நாட்டு அடிமைகளை, பிணைக்கைதிகளைப் பிடித்து வருவது போல, அதிமுக எம்எல்ஏக்களைத் தனிக்காட்டில் கொண்டுபோய் விட்டு, வீட்டினருடன் பேசமுடியாத வகையில் போனைப் பிடுங்கிக்கொண்டனர். வேறு வகைகளில் கவனம் செல்லாத வகையில் வேண்டியவற்றை சப்ளை செய்து அங்கேயே இருக்கச் செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பன்று வண்டி ஒன்றைத் தயார் செய்து, நேராக சட்டமன்றத்தில் கொண்டுவந்து இறக்கு விட்டுவிட்டு, ஓட்டுப்போடு என்பது, துப்பாக்கி முனையில் மிரட்டுவது போன்றது'' என்றார்.
சென்னையில் 4 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வைத்தியநாதன் பாலம் சந்திப்பு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை மணிகூண்டு, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடல் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வள்ளுவர் கோட்டத்தில் ஜெ. அன்பழகன் தலைமை
சென்னையில் வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. போராட்டம் குறித்துப் பேசிய ஜெ.அன்பழகன், மக்கள் மன்றத்தில் நடந்த பிரச்சனைக்கு மக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஊழலுக்கே நீதிவழங்கியது நீதிமன்றம்தான். இதனால் சட்டப்பேரவையில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். அதனால்தான் வழக்குத் தொடர்ந்துள்ளோம் என்றார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள விளையாட்டுத் திடலில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இங்கு 1000 பேர் உட்காரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிண்டி அருகே போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் வாகன நெரிசலைத் தடுக்க, தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான திமுக நிர்வாகிகளோடு, இளைஞர்களும் ஆதம்பாக்கத்தில் கணிசமான அளவில் திரண்டுள்ளனர்.
விருதுநகரில் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஐஜேகே ஆதரவு
விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்துக்கு காங்கிரஸ், ஐஜேகே கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக நிர்வாகிகளோடு காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேலாயுதம் பங்கேற்றுள்ளார். காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக தொண்டர்கள், பெண்கள் என சுமார் 1000 பேர் இங்கு திரண்டுள்ளனர்.



விருதுநகரில் திமுகவினர் போராட்டம். படம்: ஈ.மணிகண்டன்

கோவை நிலவரம்
கோயம்புத்தூரில் பவர் ஹவுஸ் பகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திமுகவுடன் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கொமதேச பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்தி ஆகியோர் போராட்டக் களத்தில் இணைந்துள்ளனர்.
'எங்களுடைய போராட்டம் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் காதுகளை எட்டும். விரைவில் சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார். திமுக, காங்கிரஸ், கொமதேக தொண்டர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என 3,000-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தல

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.