February 6, 2017
உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புகுஷிமா அணு நிலையம்!!..
புகுஷிமா அணுமின் நிலையத்திலுள்ள இரண்டாவது அணு உலையில், ஆபத்தான அளவைத் தாண்டிய கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. மேலும் குறித்த கதிர்வீச்சானது உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது என ஜப்பானிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால், புகுஷிமா அணு உலை கடுமையாக சேதமடைந்தது. மேலும் அங்கிருந்த அணு உலைகள் வெடித்ததோடு, ஆபத்தான கதிர்விச்சு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் ஏற்பட்டுள்ள அணுக்கசிவு காரணமாக மிகவும் ஆபத்தான கதிர்வீச்சுகள் வெளியாகி வருவதாகவும், அவை தாக்கியவுடன் உயிரிழப்புகள் ஏற்படுமென அந்நாட்டு ஆய்வாளர் அச்சம் தெரிவித்துள்ளதாக, ஜப்பானிய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. அத்தோடு மனித நடமாட்டமில்லாத புகுஷிமா அணு உலை பகுதியில், ரோபோக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு பாதிப்பால் ரோபோக்களின் கண்காணிப்பு செயற்பாடுகளும் பதிப்படையக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு சுனாமி தாக்கத்திற்கு பிறகு புகுஷிமா அணு உலையை பாதுகாப்பாக மூடுவது தொடர்பாக பல்வேறு திட்டங்களை ஜப்பான் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புகுஷிமா அணு நிலையம்!!..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 06, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.