Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

பிரபல நடிகையை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கார் ஓட்டுநர்!


பிரபல மலையாள சினிமா நடிகை பாவனா கேரளாவிலுள்ள கொச்சினில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை பாவனா இவருக்கு வயது 30, இவர் நேற்று இரவு எர்ணாகுளம் போலீசில் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில் தனது படப்பிடிப்பை முடித்து வீட்டு வீடு திரும்பும் போது, ஒரு டிராஃபிக் சிக்னலின் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது காரை மடக்கிபிடித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், செல்போனில் படம் பிடித்தாகவும் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த ஐந்து பேரில் ஒருவர் சுனில் என்றும் அவர் பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநராக இருந்தவர் என்றும் அவர் இல்லாத நேரங்களில் வேறு ஓட்டுநர்களை பாவனாவுக்காக அவர் ஏற்பாடு செய்துதருவார் என்றும் தெரியவந்துள்ளது.

அதுபோல், நேற்று இரவு சுனில் ஏற்பாடு செய்த கார் ஓட்டுநர் பாவனாவின் காரை ஓட்டி வந்துள்ளார், அப்போது வேறு சிலர் வலுக்கட்டாயமாக அந்தக் காரை மடக்கி பிடித்து, அதனுள் நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை பாவனாவை விதம் விதமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிட்டு, பாவனாவிடம் போலீசிற்கு கூடாது என்றும் அதனை மீறினால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாகவும் கூறி மிரட்டி உள்ளனர். பின்னர் இரவு 10 மணியளவில் அவரை பாவனாவின் நண்பர் வீட்டின் அருகில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை பாவனா, இந்த சம்பவத்தை தனது நண்பரின் துணையுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சுனில் மற்றும் அவரது நண்பர்கள் தான் அவரை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

முதன் முறையாக ஒரு பிரபல நடிகையை அவரது ஓட்டுனரே கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரிம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.