February 13, 2017
சசியை அழைக்கவேண்டாம், கவர்னருக்கு ‘பேக்ஸ்’ அனுப்பிவரும் பொதுமக்கள்!
நாங்கள் சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. அவரை முதல்வர் பதவி ஏற்ற அழைக்கவேண்டாம் என பொதுமக்கள் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு மனு அனுப்பும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா ராஜினாமா வாங்கினார். மக்கள் விருப்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவேன் என அதிரடியாக கூறியதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சசிகலா அ.தி.மு.க., எம்.எல்.ஏக்களை கூவத்துரர் தீவு சொகுசு ஹோட்டலில் தங்க வைத்து கவனித்து வருகிறார். அனைத்து எம்.எல்.ஏக்களும் தனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே என்னை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என கவர்னரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றார்.
இந்நிலையில், சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது. அந்த தீர்ப்பு ஒரு வேளை சசிகலாவிற்கு எதிராக வந்தால் அவர் மீண்டும் ஜெயில் செல்லும் நிலை ஏற்படும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் முதல்வர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக கவர்னர் தாமதப்படுத்துகிறார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
சசிகலா வசமுள்ள எம்.எல்.ஏக்களுக்கு எதிராக, பொதுமக்கள் திரண்டுள்ளனர். சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,க்களை வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அடுத்த கட்டமாக ‘ஜனநாயகம் கடத்தப்பட்டுள்ளது’ நாங்கள் சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே, அவரை ஆட்சி அமைக்க அழைக்க கூடாது என கையெழுத்திட்ட மனுவை, கவர்னர் அலுவலகத்திற்கு, பொதுமக்கள் பேக்ஸ் அனுப்பி வருகின்றனர்.
இதன் நகலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு 044— 22301300 என்ற எண்ணுக்கு பேக்ஸ் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேக்ஸ் வந்ததாக கவர்னர் மாளிகை தகவல் தெரிவிக்கிறது
சசியை அழைக்கவேண்டாம், கவர்னருக்கு ‘பேக்ஸ்’ அனுப்பிவரும் பொதுமக்கள்!
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.