Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

போயஸ்கார்டன் விரைந்தார் ஓபிஎஸ்… சசிகலாவுடன் அவசர ஆலோசன.. என்ன நடக்கப் போகுது?


இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் போயஸ்கார்டன் சென்றுள்ளார். அங்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

போயஸ்கார்டனுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 27ம் தேதிதான் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது என்றாலும் அடுத்த ஒரு வாரத்திலேயே மீண்டும் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் விரைந்துள்ளார். அங்கு பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

 தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடன் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக்குவதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.