Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

படுகாயங்களை ஏற்படுத்தும் பெல்லட் துப்பாக்கியில் மாற்றம் செய்ய முடிவு - காஷ்மீர் துணை ராணுவம் தகவல்


ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத போராட்டக்காரர்கள் மற்றும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் வன்முறையாளர்களுடன் பல அப்பாவி பொதுமக்களுக்கும் அவப்போது படுகாயங்கள் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. சில நேரங்களில் பெல்லட் குண்டுகள் கண்ணில் படுவதால் பலருக்கு பார்வை பறிபோகும் அவலம் கூட நிகழ்கிறது. வழக்கமாக வன்முறையாளர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கி குண்டுகளின் முனையில் உலோக தகடு பொருத்தப்பட்டிருக்கும். குண்டுகளின் முனையில் உள்ள உலோக தகடானது, முகம் மற்றும் கை,கால்களில் படும் போது படுகாயங்கள் ஏற்படுகின்றன. பெல்லட் குண்டுகள் தாக்குதலுக்குள்ளானோர் தாக்கப்படுவோர் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். இதனையடுத்து பெல்லட் குண்டுகளில் மாற்றம் செய்ய ஜம்மு மாநில துணை ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சி.ஆர்.பி.எஃப் ஜெனரல் துர்கா பிரசாத் கூறும் போது, காயங்களை குறைக்கும் வகையில் பெல்லட் துப்பாக்கியில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறினார். இனி வரும் காலங்களில் பெல்லட் குண்டுகளின் முனையில் உலோக தகடுகளுக்கு பதிலாக, தசை போன்ற தன்மையுடைய ரப்பர் போன்ற பொருளை பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பி்ட்டார். வன்முறையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, முட்டிக்கு கீழ் தான் பெல்லட் துப்பாக்கியால் சுட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். காஷ்மீர் நிலவரம் குறித்து மேலும் பேசிய அவர் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு வன்முறைகள், மற்றும் போலீசார் மீது கல்லெறிந்து தாக்கும் சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் அவப்போது ஏற்படும் கலவர சூழலை பொறுத்து பெல்லட் துப்பாக்கிகள் மட்டுமல்லாது பாவா எனப்படும் மிளகாய் தூளையும் துணை ராணுவத்தினர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நிலவரத்தை பொறுத்தே பெல்லட் துப்பாக்கிகள் அல்லது பாவா மிளகாய் தூளை பயன்படுத்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.