Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

நடுத்தெருவில் நின்ற நடுக்குப்ப மக்கள் : களம் இறங்கும் ஐ.டி. இளைஞர்கள்


ஜல்லிக்கட்டு அனுமதி கோரி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமானதையடுத்து அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது.

சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலால் அதில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத இளைஞர்கள் அருகிலிருந்த மீனவ கிராமங்களில் தஞ்சம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக நடுக்குப்பம், ரூதர்புரம் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் மீனவ மக்கள் மீதும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். மேலும் அங்கிருந்த குடிசைகளுக்கு தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மீனவ மக்கள் இன்று ஆதரவற்று நிற்பதால் அவர்களுக்கு உதவ இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள்.

இளந்தமிழகம் இயக்கம், அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம், மனிதி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பிரம்மோஸ் மந்த்ரா போன்ற அமைப்புகளுடன் சென்னை ஐ.டி. ஊழியர்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டகளத்தில் பாதிக்கப்பட்ட மீனவ, தலித் மக்களுக்கு நிவாரண மருத்துவ சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலவச மருத்துவமுகாம் நடைபெறும் இடம்: நடுக்குப்பம் மற்றும் ரூதர்புரம் பகுதியில் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு நலமடைய வரவேற்கிறோம்.

மேலும் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பர்களை தொடர்பு கொள்ளவும்.

Patturajan – 9840880737,
Raghavan Vijayan -9600018839,
Praveen Raj – 89396 61119
Karthick Raja – 9524723805
Selvi 9080535115.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.