Latest News

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

ஓரே அறிவிப்பில் 8 வருடத்தை முழுங்கிவிட்டார் முகேஷ் அம்பானி..!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் ஒரே காரணத்திற்காக அறிமுகமாகி 6 மாதங்கள் முடியும் நேரத்தில், 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இது நாள் வரை ஒரு பைசா கூட வாங்காமல் இலவசே சேவையை அளித்து வந்த ஜியோ, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டெலிகாம் சேவைக்கான கட்டணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனால் இந்திய சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தில் முதலீட்டை வாரி இறைத்துள்ளனர். இதனால் இன்று ஓரே நாளில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 8 வருட வளர்ச்சியை அடைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 303 ரூபாய் என்ற கட்டணத்தை அறிவித்து இனி ஜியோ வருமானத்தை ஈட்ட துவங்கும் என அறிவித்தார்.
இதனால் முதலீட்டாளர்கள் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர். இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 11.17 சதவீதம் உயர்ந்து 1,209.80 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.
இதன் மூலம் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 8 வருட உயர்வைச் சந்தித்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தின் துவக்கத்தில் ஒரு மணிநேர வர்த்தகத்தில் மட்டும் சுமார் 12 லட்ச பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 2 வாரச் சராசரி வர்த்தக எண்ணிக்கையே 2.18 லட்ச பங்குகள் தான்.
8 வருட வளர்ச்சியை அடையும் அளவிற்கு அந்த அறிவிப்பில் என்ன இருந்தது.?
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்குப் பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் வெறும் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச வாய்ஸ்கால் சேவை, தினமும் 1 ஜிபி அதிவேக 4ஜி இண்டர்நெட் சேவைகளை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.
பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த விரும்பாத ஜியோ வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் பேக் மூலமாக 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.