Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

ஒரு ஆண் நேர்மையானவரா? போலியாக நடிக்கிறாரா? என பெண்கள் எப்படி அறிகிறார்கள் : 8 அறிகுறிகள்!


அறிகுறி   1 
நேர்மையான ஆண் எல்லா பெண்களையும் சம மதிப்பு அளித்து பழகுவார். ஒருபோதும் தாழ்த்தி நடத்தை விரும்ப மாட்டார். போலியாக நடிக்கும் ஆண்கள் பணக்கார பெண்களுக்கு மதிப்பு அளிப்பார்கள், பணமில்லை என்றால் கேவலமாக கருதுவார்கள்.
அறிகுறி   2 
நேர்மையான ஆண் ஒருபோதும் ஒரு பெண்ணை ஈர்க்க நினைக்க மாட்டார். போலியானவர்கள் தங்களை ஸ்மார்ட்டாக காண்பித்துக் கொள்ள நடித்துக் கொண்டே இருப்பார்கள்.



அறிகுறி  3 
ஒரு நேர்மையான ஆண், இந்த சமூகம் தன்னை உற்றுப் பார்க்க வேண்டும் என தனியாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால், போலியானவர்கள் யாரேனும் தன்னை புகழ வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளில் ஈடுபடுவார்கள்.
அறிகுறி  4 
நேர்மையான ஆண்கள் பண்பாக நடந்து கொள்வார்கள். போலியானவர்கள் தலைமை வகிக்க, தங்களை மேற்கோளிட்டு காட்டிக் கொள்ள துடித்து கொண்டே இருப்பார்கள்.



அறிகுறி  5
நேர்மையான ஆண்கள் எதிலும் நேரடியாக நடந்து கொள்வார்கள். எதையும் மறைக்க மாட்டார்கள். போலியானவர்கள் தங்கள் நடத்தையில் சிலவற்றை மறைத்துக் கொள்வார்கள்.

அறிகுறி  6
நேர்மையான ஆண்கள், தங்களால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே வெளியே கூறுவார்கள். தங்கள் தோல்விகளையும் ஒப்புக் கொள்வார்கள். போலியானவர்கள் போலி சத்தியங்கள் செய்வார்கள், தோல்விகளுக்கு சாக்குபோக்கு சொல்வார்கள்.



அறிகுறி 7
நேர்மையான ஆண்கள் மற்றவர்களை புண்படுத்தி சிரிக்க மாட்டார்கள். போலியான ஆண்கள் மற்றவர்களை விமர்சித்து அதில் இன்பம் காண்பார்கள்.
அறிகுறி  8
நேர்மையான ஆண்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். போலியானவர்கள் மற்றவரிடம் இருந்து சுரண்டுவார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.