Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

8 நிமிடங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு..!


நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 8 நிமிடங்களுக்குள் நீதிபதிகள் வாசித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் 6ம் எண் கோர்ட்டுக்கு காலை, 10:32 மணிக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் வந்தனர். அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூடி இருந்தனர்.

தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு நீதிபதிகள் இருவரும் சில வினாடிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர். அப்போது பார்வையாளர்கள் கேலரியில் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து, நீதிபதி கோஷ் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசிக்க தொடங்கினார். 8 நிமிடங்களில் தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.

அவர் தீர்ப்பை வாசித்து முடித்த உடனேயே அந்த அறை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் அவர்களது அலுவலகத்துக்கு செய்தியை தெரிவிக்க தீவிரம் காட்டினர்.

நீதிபதி அமித்வா ராய் அவரது தீர்ப்பை வாசிக்க ஆரம்பிக்கும் முன்பு, ‛ சமூகத்தில் ஊழல் என்ற பிரச்னை தலை விரித்து ஆடுவது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.