February 12, 2017
8 எம்பிக்கள்.. 6 எம்எல்ஏக்கள்.. வலுக்கும் ஓபிஎஸ் முகாம்..திணறும் "மன்னார்குடி"!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 8 எம்.பிக்கள், 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் மன்னார்குடி கோஷ்டி திணற ஆரம்பித்துள்ளது
முதல்வர் ஓபிஎஸ்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆதரவு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு அணி தொடரும் ஆதரவால் மன்னார்குடி கும்பல் செய்வறியாது திகைத்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்ற மன்னார்குடி கும்பல் எப்படியாவது முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும் என துடியாய் துடித்து வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.
இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சசிகலா தரப்பு நிர்வாகிகள் அணி மாறி வருகின்றனர். தற்போது வரை பெரும்பான்மையை வைத்துள்ள சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் அணி தாவலால் அச்சமடைந்துள்ளது.
பீதியில் மன்னார்குடி கும்பல்
மொத்த எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதற்குள் அரியணையில் அமர்ந்துவிட வேண்டும் என முனைப்பாய் உள்ள சசிகலா ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கவும் மன்னார்குடி கும்பல் திட்டமிட்டுள்ளது.
ஓபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு
இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் 3 எம்பிக்கள் ஆதரவு
இன்று அதிமுக எம்பிஎக்கள் 3 பேர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலூர் எம்பி செங்குட்டுவன், தூத்துக்குடி எம்பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் எம்பி மருதுராஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எம்பிக்கள் ஆதரவு 8ஆக அதிகரிப்பு
ஏற்கனவே மைத்ரேயன் உள்ளிட்ட 5 எம்பிக்கள் ஆதரவு அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 2 எம்பிக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
6 எம்எல்ஏக்கள் ஆதரவு
ஓபிஎஸ் அணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உட்பட 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேபி.முனுசாமி நத்தம் விசுவநாதன், பொன்னையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் ஓபிஎஸ்க்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயபாலும் சேர்ந்தார்
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலும் முதல்வர் ஓபிஎஸ்க்கு இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெயபால் அதிமுக மாநில மீனவர் அணி செயலாளராக உள்ளார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் 9 ஆக அதிகரிப்பு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயபாலுவின் ஆதரவு மூலம் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆதரவு
ஓபிஎஸ் அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துள்ளது. பொதுமக்களும் ஓபிஎஸ்தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றர். அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு ஓபிஎஸ்க்கு பெருகி வருவதால் மன்னார்குடி கும்பல் பீதியடைந்துள்ளது.
8 எம்பிக்கள்.. 6 எம்எல்ஏக்கள்.. வலுக்கும் ஓபிஎஸ் முகாம்..திணறும் "மன்னார்குடி"!
Reviewed by மறத்தமிழன்
on
February 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.