Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

மின்சார வயர் விழுந்ததால் கைகள் துண்டித்த 8 வயது சிறுவனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 18-ந்தேதி தனது தாயாருடன் கீரை தோட்டத்துக்கு சென்றான்.
அப்போது உயர் அழுத்த மின்சார வயர் சிறுவன் மீது விழுந்தது. மின்சாரம் தாக்கியதால் அவன் தீக்காயத்துடன் சுயநினைவை இழந்தான். அவனது இரண்டு கைகளும் முற்றிலும் எரிந்து செயல் இழந்தன. சிறுவனை காப்பாற்ற அவனது தாயார் சுங்காரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ரூ.2 லட்சம் செலவழித்தும் சிறுவனின் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டதை தடுக்க இயலவில்லை.

இதை தொடர்ந்து சிறுவனின் தாயார் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு இமாச்சல பிரதேச கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில் எனது மகன் திறமையாக படிக்க கூடியவன். புத்திசாலி. மின்சார வயர் விழுந்ததால் அவனது கைகள் துண்டிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு மாநில அரசு தான் பொறுப்பு. இதனால் ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு கடந்த மாதம் 9-ந்தேதி பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.1.25 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து இமாச்சல பிரதேச அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
ஜே.செலமேஷ்வர், ஏ.எம்.‌ஷப்ரே ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த அப்பீல் மனுவை விசாரித்தது.
சிறுவனின் கைகள் துண்டிக்கப்பட்டதற்கு இமாச்சல பிரதேச அரசுதான் பொறுப்பு. இதனால் மொத்த நஷ்டஈடாக அவனது குடும்பத்துக்கு ரூ.1.16 கோடி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.