February 15, 2017
ஜெய வை 75 நாட்களாக சசிகலாவிடம் அடமானம் வைத்த பன்னீர் செல்வம் தமிழக மக்களை அடகு வைக்கமாட்டாரா?
சசிகலாவை மக்கள் ஏற்கவில்லை. பன்னீர் செல்வத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மக்கள் ஏற்றுக் கொள்வதால் ஒருவர் நல்லவர் ஆகி விட முடியுமா? டொனல்டு டிரம்ப் கூட மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் தான்.
அதே நேரம் பன்னீர் செல்வம் மக்களால் முதலமைச்சராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஜெயலலிதாவில் நியமிக்கப்பட்டவர் அவ்வளவு தான்.
ஜெயலலிதாவை தெய்வமாக போற்றி வந்த அவர் 75 நாட்களாக ஒருவர் அவரை அப்பல்லோவில் வைத்துக்கொண்டு, யாரிடமும் காட்டாத போது, அதனை எதிர்த்து பேசாதவர் பன்னீர் செல்வம்.
முதலமைச்சராக நீடிக்க விட்டிருந்தால், இன்று வரை பேசாமல் தான் இருந்திருப்பார். பதவி தன் கையை விட்டு போகிறது என்ற உடன் மக்கள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை அரசியல் ஆதாயமாக மாற்றத் துடிக்கிறார்.
இவர் மீதும் ஊழல் மோசடி புகார்கள் உள்ளன. எம்.எல்.ஏக்களை சசிகலா அடைத்து வைத்திருக்கிறார் என குற்றம் சாட்டும் இவர், பணமே கொடுக்காமல் தான் எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருகிறார்கள் என மனசாட்சிக்குட்பட்டு சொல்ல முடியுமா?
இவரை ஆதரிக்கும் அன்புநாதன், சேகர் ரெட்டி போன்ற பண முதலைகள், பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆகிவிட்டால் அதனை மொத்தமாக திரும்ப எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் செயல்படுகின்றனர் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியுமா?.
மிடாஸ் ஆலை மூலம் டாஸ்மாக்கிற்கு சாராயம் விற்று பல கோடிகளை அள்ளும் சசிகலா ஒழிந்தால், அந்த ஒப்பந்தத்தை நாம் பெற்று, கோடிகளை அள்ளலாம் என்ற கணக்கு அவர்களிடம் இல்லாமல் இருக்குமா?.
சமூக வலைதளங்களில் தனக்கிருக்கும் ஆதரவைத் தான் பன்னீர் செல்வம் பெரும் பலமாக கருதுகிறார். அந்த ஆதரவு நல்லாட்சிக்குத் தான் என்பதை உணர்த்த வேண்டும்.
தான் தெய்வமாக கருதிய ஜெயலலிதாவையே பதவிக்காக தூக்கி எரிந்த பன்னீர் செல்வம் நாளை பதவிக்காக தமிழக மக்களை மத்திய அரசிடமோ, பன்னாட்டு நிறுவனங்களிடமோ அடகு வைக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்
ஜெய வை 75 நாட்களாக சசிகலாவிடம் அடமானம் வைத்த பன்னீர் செல்வம் தமிழக மக்களை அடகு வைக்கமாட்டாரா?
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.