Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

நெடுவாசலுக்குள் நுழைய போலீஸ் தடை - சோதனையை தாண்டி குவிந்த 70 கிராம மக்கள்


 நெடுவாசல் கிராமத்திற்குள் நுழைய போலீஸ் தடை விதித்த நிலையில் தடையை மீறி 70 கிராம மக்கள் குவிந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு வரும் போராட்டக்குழுவினரை 7 சோதனை சாவடி அமைத்து போலீசார் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. தடையை மீறி நெடுவாசலில் குவிந்த 70 கிராம மக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அனுமதி அளித்தது.
இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் போராட்டம்
நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. நெடுவாசலில் கடந்த 12 நாட்களாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு
பயிர்கள் நன்கு செழித்து வளரும் விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பும் போராட்டக் களத்தில் உள்ளன. கடந்த 12 தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் தடை
திட்டம் முழுமையாக கைவிடப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் 70க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர்.

ஆலோசனைக்கூட்டம்
போலீஸ் தடையைத் தாண்டி இன்று இன்று நெடுவாசலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 2,000 பேர் பங்கேற்றனர். அடுத்தகட்டமாக அமைதியான முறையில் போராடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.