February 26, 2017
57ரன்னுக்கு 6 விக்கெட்டாகி தவித்த ஜார்கண்ட் அணியை சதம் அடித்து காப்பாற்றிய தோனி
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் தோனி.
சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ள தோனி, உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 43 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தவித்தது. அந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய தோனி அட்டகாசமான சதம் விளாசி 249 ரன்கள் எடுக்க உதவினார்.
தோனி சதம்:
முதல் போட்டியில் கர்நாடகா அணியுடன் 43 ரன்கள் அடித்தார் தோனி. அந்த போட்டியில் ஜார்கண்ட் தோல்வியை சந்தித்தது.
இக்கட்டான சூழல்:
தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் அணி விளையாடியது
தோனி 96 ரன்கள் இருந்த பொழுது அசத்தலான சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். தோனி 107 பந்துகளில் 129 ரன்களை குவித்தார். அதில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.
அவருடன் பங்கஜ் ராவ் 53 ரன்கள் எடுத்து தோனிக்கு உதவினார்.
இந்த போட்டியில் ஜார்கண்ட் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தியது.
57ரன்னுக்கு 6 விக்கெட்டாகி தவித்த ஜார்கண்ட் அணியை சதம் அடித்து காப்பாற்றிய தோனி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.