Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

ரிசார்ட்டில் இருந்து ஓடிவந்த எம்.எல்.ஏ சரவணன்! மோசடி பேர்வழி? 50 கோடி பேரம் நடந்ததா?


சின்னம்மாவே எங்களது தெய்வம் என்று சொல்லி கூவத்தூர் ரிசார்டிற்கு சென்ற எம்.எல்.ஏக்களில் ஒருவர் சரவணன். சில தினங்களுக்கு முன் பன்னீர் அணியில் ஐக்கியமான மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன்,  எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்துள்ளதாகவும், பெர்முடாஸ் அணிந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

இவர் கூறியதில் ஏதாவது உண்மை உள்ளதா என ஆராய்ந்தால் இவர் சசிகலாவை விட பெரிய மோசடி பேர்வழி என தோன்றுகிறது. காரணம் கடந்த 11 ஆம் தேதி ரிசார்டில் காஞ்சிபுரம் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது காவல்துறையிடம் இந்த சரவணன் புகார் அளிக்காமல் எங்கே போனார்.

காவல்துறை தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்து விட்டது. ஆக, இந்த சரவணன் காவல்துறை அங்கு வந்த போது என்ன நடந்தது என்பது குறித்து விளக்க வேண்டும்.

ஒரு வேளை காவல்துறையும் சசிகலாவிற்கு உடந்தை என்றால் அந்த அதிகாரிகள் மீது சரவணன் வழக்கு தொடர முன்வருவாரா என்பதையும் விளக்க வேண்டும். இவருக்கு பன்னீர் செல்வம் தரப்பு 50 கோடி தருவதாக கூறியதால் தான் அங்கிருந்து சென்றதாகவும், இப்போது குற்றம் சொல்வதாகவும் அவர் மீது புகார்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.