Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

சிறையில் சசிக்கு ஊதுபத்தி சுற்றும் வேலை ஒதுக்கீடு – தினமும் ரூ.50 சம்பளம்!


சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியதையடுத்து, இன்று 15ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடையவுள்ளார்.

அதை தொடர்ந்து அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளார். பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைய வசதி செய்யப்பட்டுள்ளது.

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெண்கள் சிறையிலும் சுதாகரன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்படவுள்ளனர். சசிகலாவிற்கு எந்த சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்காமல் அனைத்து கைதிகள் போல் நடத்தபடுவார் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

மேலும் தண்டனை கைதி என்பதால் சிறை வந்த ஒரு வாரத்தில் அவருக்கு சிறையில் பணி ஒதுக்கப்படும். சசிகலா வயது காரணமாக அவருக்கு கல் உடைப்பது மண் சுமப்பது போன்ற கடின வேலை கொடுக்காமல் சிறை வளாகத்தில் ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

அப்படி வேலை செய்யும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.50 சம்பளம் வழங்கப்படும். இது சிறையின் நடை முறை என கூறுகின்றனர்.

மேலும் வெளி சாப்பாடு அனுமதி கிடையாது. சிறையில் மூன்று வேளையும் சாப்பாடு கொடுக்கப்படும். காலை 6.30 மணிக்கும், மதிய சாப்பாடு 11.30 மணிக்கும், மாலை 6 மணிக்கு இரவு சாப்பாடும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.