February 23, 2017
தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு எந்த எந்த கடைகள் என பட்டியல் அறிவிப்பு
நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதுதவிர, 169 மதுபார்களும் மூடப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு மாவட்ட வாரியாக அவற்றின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்தில் 105 டாஸ்மாக் கடைகள் 63 மதுபார்கள் மூடப்படுகின்றன. கோயமுத்தூரில் 44 டாஸ்மாக் கடைகள், 20 பார்கள் மூடப்படுகின்றன. சேலத்தில் சேலம் 133 டாஸ்மாக் கடைகள், 26 பார்கள் மூடப்படுகின்றன. திருச்சியில் 119 டாஸ்மாக் கடைகள் 23 பார்களும், மதுரையில் 99 டாஸ்மாக் கடைகளும் 37 பார்களும் மூடப்படுகின்றன.
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்திலேயே மாற்றுப்பணி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 கடைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆம்தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேலும் 500 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் மூடப்படும் என அறிவித்து அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு எந்த எந்த கடைகள் என பட்டியல் அறிவிப்பு
Reviewed by மறத்தமிழன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.