February 3, 2017
ஒரே நாளில் 500 முறை கொலை மிரட்டல்.. அதிர்ந்து போன லியோனி.. போலீசில் புகார்
லியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் டிஎஸ்பியிடம் லியோனி புகார் கொடுத்தார்.
திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பாமக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பழனியில் நேற்று நடிகரும், திமுக பிரமுகருமான, வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார் லியோனி. ஆனால் மதியத்திற்குள், லியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தலைமைக்கு லியோனி தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திண்டுக்கல் டிஎஸ்பியிடம் லியோனி புகார் கொடுத்தார்.
இதுகுறித்து கூறிய லியோனி, "பாமகவின், காடுவெட்டி குரு பிறந்தநாள் வரப்போவதாகவும், அவரை நான் பட்டிமன்றங்களில் தவறாக பேசிவிட்டதாகவும் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். உண்மையில் நான் பாமகவின் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குறித்து எதுவும் பட்டிமன்றங்களில் பேசவில்லை" என்றார்.
கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அன்று மாலை திருவண்ணாமலை நகரத்தில், திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவை லியோனி விமர்சித்து பேசியதாக பாமக பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம், திண்டுக்கல் ஐ.லியோனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 500 முறை கொலை மிரட்டல்.. அதிர்ந்து போன லியோனி.. போலீசில் புகார்
Reviewed by மறத்தமிழன்
on
February 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.