Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் 5, 41,540 போலி ரேசன் கார்டுகள் ரத்து!


ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ” தற்போது நடைமுறையில் உள்ள ரேசன் கார்டுகளுக்கு பதிலாக ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

தற்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ரேசன் கார்டுடன் இணைத்துள்ளனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும் என்று கூறினார். மேலும், தற்போது வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி ரேசன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன ” என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.