Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

சென்னையில் மின்சார ரயில் விபத்து: மூவர் பலி; 4 பேருக்கு தீவிர சிகிச்சை


சென்னையில் மின்சார விரைவு ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி, கீழே விழுந்ததில் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் பரங்கிமலை அருகே வந்த போது அதில் படியில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி, கீழே விழுந்ததில் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெருங்களத்தூரைச் சார்ந்த பிரவீன் என்று தெரியவந்துள்ளது. இவர் துறைமுகத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார்.
படியில் தொங்கியபடி பயணம் செய்த மேலும் 4 பேர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட பரங்கிமலையில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் விபத்து நடந்த பகுதியில் தெற்கு ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பணிக்குச் செல்லும் சூழலில் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதும், நெரிசல்மிக்க கூட்டம் இருந்தும் குறைவான அளவில் ரயில்கள் இயக்கப்படுவதுமே விபத்துக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
மாணவர்கள், இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் விளையாட்டுத்தனமாக இருப்பதும் விபத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.