February 22, 2017
காஸியாபாத் போலி என்கவுண்ட்டர்: 4 உ.பி. போலீசாருக்கு ஆயுள் தண்டனை
காஸியாபாத் போலி என்கவுண்ட்டர் தொடர்பான வழக்கில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 4 போலீசாருக்கு 20 வருடம் கழித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காஸியாபாத் என்கவுண்ட்டர் சம்பவத்தில் 20-ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 4 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் பகுதியில் 1996-ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. விஜய்நகர் பகுதியை சேர்ந்த ஜலாலுதீன், ஜஸ்பிர், அசோக் மற்றும் பிரவேஸ் ஆகிய நான்கு இளைஞர்கள் போலீசாரால் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தன்று போஜ்பூர் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடை ஒன்றில் அந்த 4 இளைஞர்களும் (நவ. 8) அமர்ந்திருந்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த அவர்கள், தினசரி கூலி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி
வந்திருந்தனர்.
அந்த 4 இளைஞர்கள் காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்ற போஜ்பூர் போலீசார் அவர்களை சித்ரவதை செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கை சிபிஐ நீதிமன்ற விசாரித்து வந்தது. 20 வருடங்களுக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்று வந்தது.
கொலை செய்தல், தடையங்களை அழித்தல் மற்றும் தவறான ஆதாரங்களை அளித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் போலீசார் மீது சுமத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காஸியாபாத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் போஜ்பூர் காவல்நிலையத்தை சேர்ந்த 4 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
முன்னதாக சிபிஐ சிறப்பு நீதிபதி(ஊழல் எதிர்ப்பு) ராஜேஷ் சௌவுத்ரி கடந்த திங்கட்கிழமை அன்று 4 போலீசாரையும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து இருந்தார்.
காஸியாபாத் போலி என்கவுண்ட்டர்: 4 உ.பி. போலீசாருக்கு ஆயுள் தண்டனை
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.