சரனடைய 4 வாரம் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரனடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உடனடியாக சரனடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தீர்ப்பை ஏற்கிறோம். அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கிறது.
அதனை சரி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லை என்பதால் உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். ஆகையால் 4 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு பிற்பகலுக்கு பின் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.