சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் 4 நாட்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் உல்லாச ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு. அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
அவர்களுக்கு செம கவனிப்பு செய்வதற்கு சசிகலா உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர்கள் படு உற்சாகத்தில் உள்ளனா்.
ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாதபோது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவரும் தனது பங்குக்கு ரூ.1 சி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு அழைத்து வரப்பட்டபோதும் மன்னார்குடியினரால் கவனிப்பும் நடந்ததாம்.
இந்த நிலையில் தற்போது தங்க வைக்கப்பட்டு கவனிப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல ஒரு எம்எல்ஏவுக்கு ஒரு இன்ஸ்பெக்டா் வீதம் அவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையும் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.