February 9, 2017
சசிகலாவுக்கு அல்வா கொடுத்த எம்.ல்.ஏ.க்கள்! 3 பேர் தப்பி ஓட்டம்!
சிகலா மீது முதல்வர் ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்து அவசர எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
ஓபிஎஸ் பக்கம் எந்த எம்.எல்.ஏக்களும் சென்று விடக்கூடாது என்பதற்காக நேற்று இரவில் இருந்தே எம்.எல்.ஏ.க்களை ஸ்டார் ஹோட்டல்களில் கண்காணிப்பில் வைத்திருந்தனர் மன்னார்குடி கும்பல்.
அங்கிருந்து நேரடியாக, தலைமை அலுவலகம் அழைத்து வரப்பட்டனர். எம்எல்ஏக்கள் அனைவரும் கடும் கெடுபிடியுடன் நடத்தப்பட்டனர். செல்போன்களும் கூட கண்காணிக்கப்பட்டன. இதற்கு பலர் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணப்பாறை தொகுதி உறுப்பினர் சந்திர சேகர், கூட்டம் அதிகமாக உள்ளதால், நெஞ்சு படபடப்பாக வருகிறது எனக் கூறிவிட்டு, வெளியே சென்றவர் மன்னார்குடி கும்பலுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இந்நிலையில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்று துணி எடுத்து வருவதாக கூறி தப்பி விட்டனர்.
மற்றொரு எம்.எல்.ஏ.வான ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் எம்.எல்.ஏ. கூட்டத்திற்கு செல்லாமல் தனது காரிலேயே சென்னையை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
மன்னார்குடி கும்பலின் பாதுகாப்பிலிந்து மரண பீதியில் தப்பித்து ஓடும் எம்.எல்.ஏ.க்கள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்த வருவதால் சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் அதிர்ச்சிடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு அல்வா கொடுத்த எம்.ல்.ஏ.க்கள்! 3 பேர் தப்பி ஓட்டம்!
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.