February 6, 2017
தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்... ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள்... அழகிரி மகன் கிண்டல்
சசிகலா தமிழக முதல்வராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அழகிரியின் மகன் தயா அழகிரி டிவிட்டரில் அதனை கிண்டல் செய்துள்ளார்.
சசிகலா முதல்வராவது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அழகிரியின் மகன் தயா அழகிரி தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை பார்த்துள்ளனர் என கிண்டல் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து வரும் 9ஆம் தேதிக்குள் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் இந்த முடிவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அழகிரியின் மகன் தயா அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தமிழக மக்கள் ஒரு வழியில் அதிர்ஷ்டசாலிகள்தான். ஒரே ஒரு வாக்களித்துவிட்டு 3 முதல்வர்களை பார்த்துள்ளனர் என அவர் கிண்டல் செய்துள்ளார்.
தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்... ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள்... அழகிரி மகன் கிண்டல்
Reviewed by மறத்தமிழன்
on
February 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.