Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 6, 2017

3 முறை ராஜினாமா செய்யும் அதிர்ஷ்டம் பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே கிடைக்கும்!


இந்தியாவிலேயே 3 முறை தன்னோட பதவிகாலம் முடியாமலேயே ராஜினாமா செய்யும் அதிர்ஷ்ட முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவை ஒருமனதாக முதல்வராக தேர்ந்துதெடுத்துள்ளனர். இதனால் அவர் ஓரிரு நாட்களில் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார்.
இந்நிலையில், கடந்த 2001ம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதா பதவியில் தொடர முடியாதபோதும், 2014ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சாரக இருந்தபோது சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றபோது முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
அதனை தொடர்ந்து மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவர் இறக்கநேரிட்டது. அப்போதும் பன்னீர்செல்வம் முதலமைச்சராக தேர்வானார்.
தற்போது சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்க மீண்டும் தன்னோட பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் மூன்று முறையும் ராஜினாமா செய்யும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.