Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 25, 2017

3 அமைச்சா்கள் விரட்டியடிப்பு..! அம்மாடியோவ் இது என்ன?


தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னா் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் சசி அணியில் இருந்த எம்எல்ஏக்கள் 121 போ் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் சசியின் அணியினருக்கு வாக்களிக்க பல கோடிகள் பணம், 1 கிலோ தங்கமும் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிந்தன.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களை காணவில்லை என்று பொதுமக்கள் பலா் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனா்.

பலா் நீதி மன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் முன்னா் மக்களாகிய எங்களை சந்தித்து முடிவுகளை கேட்க வேண்டும் என்றும் கூறினா்.

மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக கூறி ஊருக்கு சென்ற எம்எல்ஏக்கள் விரட்டியடிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் இன்று நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது.

இந்த விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான வளா்மதி, அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றுள்ளனா்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினா் சசிக்கு ஆதரவாக ஏன் செயல்பட்டீர்கள் என்று கேள்விக்கேட்கத் துவங்கினா். இதனை சற்றும் எதிர்பாராத அவா்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றனா்.

சிலா் மட்டும் கேள்விக் கேட்ட நிலையில் சிறிது நேரத்தில் சுற்றி நின்றவா்கள் அனைவரும் கேள்விக்கேட்க துவங்கினா். என்னடா இது வம்பாகப்போனது என்று நினைத்த அமைச்சா்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனே காரில் ஏறி பறந்தனா்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.