Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

3 வயது ரித்திகா படுகொலையும் வெளிவராத ரகசியமும் - தமிழச்சி


சென்னை எண்ணூரை சேர்ந்த 3 வயது ரித்திகா, புறநகர் பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை மொத்தமாக கொட்டும் இடத்தில் குப்பை லாரி கொட்டிய குப்பைகளில் ஊடாக ரித்திகா பிணமாக விழுந்தாள்.
அவளின் வாய்க்குள் துணி திணிக்கப்பட்டிருந்ததோடு, வாயும் துணியால் இறுக்கி கட்டபட்டிருந்தது.
மருத்துவ அறிக்கையின்படி ரித்திகா ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறது.
ஆனால் ரித்திகாவின் எதிர்வீட்டு பெண் ரேவதி என்பவர் அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞான் நகைகளை திருடிக் கொண்டு படுகொலை செய்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகிறது.

சட்ட ஒழுங்கு கெட்டுவிடகூடாது என்பதற்காகவோ, தமிழகமக்களை பதற்றம் அடைய செய்துவிடகூடாது என்பதற்காகவோ, காவல்துறையினர் தவறான தகவலை கூறுவதோடு...
ரித்திகாவின் பெற்றோர் மருத்துவ அறிக்கையின்படி, தங்கள் மகள் பலாத்காரம் செய்யப்பட்டதை விசாரிக்கும்படி கோரியதை தமிழக காவல்துறை ஏற்க மறுத்துவிட்டது.

ரித்திகா படுகொலை செய்யப்பட்டது பிப்ரவரி 20-ம் தேதி. இதுவரை FIR பதிவு செய்யப்படவில்லை. இதன் தொடர்பாக ஜனநாயக மாதர்சங்கம் நேற்று FIR பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது.

3 வயது குழந்தை பலாத்காரம் என்பது பயங்கரமான ஒரு நிகழ்வு. அதை தமிழக காவல்துறை இருட்டடிப்பு செய்வதன் மூலம் காவல்துறையின் நடவடிக்கைகள் ஏன் இவ்வளவு இழிவாக உள்ளது.
இதன் மூலம் சமூக விரோதிகள் அதிகமாக உருவாகுவதை காவல்துறை ஊக்குவிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் புகாரை ஏற்றுகொள்வதற்குகூட இந்த நாசமாக போன சமூகத்தில் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது.

#தமிழச்சி
22/02/2017

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.