February 15, 2017
ஜெ. சமாதியில் சசிகலா 3 முறை ஓங்கி அடித்து ஏற்ற சபதம் என்ன தெரியுமா?
சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா ஜெயலலிதாவின் சமாதியின் மேல் ஓங்கி 3 முறை அடித்து சபதம் ஏற்றார்.
சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குற்றவாளி சசிகலா ஏதோ முனகிய படியே ஜெயலலிதாவின் சமாதியின் மேல் ஓங்கி 3 முறை அடித்து சபதம் ஏற்றார். அந்த சபதம் என்ன என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில் அது என்ன சபதம் என தெரியாமல் குழம்பிய மக்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அவர் என்ன முனுமுனுத்தார் என்பதையும் அதிமுக ஐடி விங்க் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகத் தெளிவாக பதிவிட்டுள்ளது. அதை நீங்களும் பாருங்கள்...
சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன். இது தான் அந்த சபதமாம். ஏற்கனவே அதிமுக டிவிட்டர் பக்கத்தில் சசிகலாவை கழுவி கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள் சசிகலா ஓங்கி அடித்ததையும் அவரது சபதத்தையும் வச்சு செய்து வருகின்றனர்.
ஜெ. சமாதியில் சசிகலா 3 முறை ஓங்கி அடித்து ஏற்ற சபதம் என்ன தெரியுமா?
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.