February 13, 2017
பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்!
சென்னை போரூரை அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. தனியார் பள்ளி ஆசிரியை.
இவர்களின் மகளான ஹாஷினி (7 வயது) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தன்வந்த் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க.,உட்கட்சி பிரச்சனைக்கு பிறகு முதன் முதலாக இன்று தலைமை செயலகம் வந்து முதல்வர் பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர், சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். ஹாசினி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். முதல்வரின் செயல்பாடு சசிகலா மற்றும் அமைச்சர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்!
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.