February 15, 2017
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 31 பேர், விடுவிக்க கோரி உண்ணா விரதம்.
யாழ்ப்பாணம் : இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 31 பேர், விடுவிக்க கோரி உண்ணா விரதம் துவக்கினர். ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகை ஆகிய பகுதியில் இருந்து இரு மாதங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 31 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ஊர்காவல்துறை மீன்துறையினர் வழக்கு பதிந்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடக்கின்றன.இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்கள் 31 பேரும், நேற்று முதல் உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர். இந்திய துணை துாதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை சந்தித்து சமரசம் செய்தனர். ஏற்க மறுத்த மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்வதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 31 பேர், விடுவிக்க கோரி உண்ணா விரதம்.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.