February 7, 2017
சசிகலாவுக்கு எதிராக களத்தில் குதித்த ஓபிஎஸ்! 31 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை!!
முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சசிகலா. கட்சியின் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான தலைவர்களை அவரை சந்தித்துவிட்டனர்.
சசிகலாவுக்கு எதிராகக் கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட செங்கோட்டையன், தம்பிதுரை போன்றோரும், சசிகலா தலைமையை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இதுவரையில் சசிகலாவை சந்திக்கவில்லை.
திமுக, மத்திய அரசு அதிர்ச்சி
சசிகலா தரப்பு நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த நிலையில் வேறுவழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். இது மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது.
தமிழகம் கொந்தளிப்பு
சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னமும் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கவில்லை. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
தாமதப்படுத்தும் மத்திய அரசு
இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை முன்வைத்து சசிகலா பதவியேற்பை தாமதப்படுத்துகிறது மத்திய அரசு.
எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை
தற்போது மத்திய அரசும் திமுகவும் நெருக்கடி தரத் தொடங்கியிருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டாராம். அதிமுகவில் உள்ள 31 எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு தொடங்கியுள்ளதாம்.
சசிக்கு எதிராக...
ஓபிஎஸ் அணியும் திமுகவும் கைகோர்த்து ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கலாம்.. அப்படி செய்தால் சசிகலா முதல்வராவதைத் தடுத்துவிட முடியும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
சசிகலாவுக்கு எதிராக களத்தில் குதித்த ஓபிஎஸ்! 31 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை!!
Reviewed by மறத்தமிழன்
on
February 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.