முடிவு செய்து விட்டார்கள் மாணவக்கண்மணிகள் மற்றும் இளஞ்சிங்கங்கள். கோவையிலும், சென்னையிலும் வரும் ஞாயிறு நாட்டை மீட்க மாணவர்கள் களம் காண்கிறார்கள்.
கோவை வ.உ.சி மைதானத்தில் முதல்கட்டமாக மூவாயிரம் மாணவர்களும், மெரினாவில் ஐந்தாயிரம் மாணவர்களும் கூடுகிறார்கள்.
தேவைப்பட்டால் போராட்டம் ஒரு மாதம் கூட நீடிக்கும். யாரும் எங்களுக்கு உணவு தர வேண்டாம், நடிகர்கள், அரசியல்வாதிகள் வரக்கூடாது.
எங்கள் உணவை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். சோறு போட்டு சொல்லிக் காண்பிக்கும் கூட்டத்தின் மத்தியில் அந்த உணவு எங்களுக்கு வேண்டாம்.
இது எம் தலைமுறைக்கான போர். பொது மக்கள் கலந்து கொள்ளுங்கள். போனமுறை போலீஸ் எங்களை சுட்டுக் கொலை செய்ய திட்டம் போட்டது.
சசிகலாவின் பினாமி ஆட்சியை ஒத்துக்கொள்ள மாட்டோம். விரட்டிவிட்டுத் தான் திரும்புவோம் என்கிறார், கோவை மாணவர் சின்னராசு.
இம்முறையும் போலீஸ் எங்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய்ந்தாலும் ஓயாது எங்கள் போராட்டம், என்கிறார். மாணவர்களே அற வழியில் போராடுங்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.