Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

29 பேர் மட்டுமே : சிங்கமாக தட்டிக்கேட்ட கேப்டன், ஜெ.,வை நடுங்கவைத்த கேப்டன்,


ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியில்  எதிர்க்கட்சித்  தலைவரான  விஜயகாந்த் சட்ட சபையில் ஜெயலலிதாவை பார்த்து கேட்டார்.
ஆட்சிக்கு வந்து மூணே மாசத்துல இப்படி பால் விலையை ஏத்துறீங்களே?  இது என்ன நியாயம்? சாமானிய மக்கள் பாதிக்கப்படுவாங்களே..? என்று கேட்டதோடு   கோபத்தில் நாக்கைத்துருத்திக்கொண்டு…. கையை நீட்டியும் ஆவேசப்பட்டார். அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
அதன் பிறகு ஜெயலலிதா அவர்கள் சொன்னது:
நாங்கள் பால்விலையை உயர்த்திய பின்பு  அதே தொகுதியில் நின்று ஜெயித்துக்காட்டுகிறோம்.  உங்களால் முடியுமா?  என்பதுதான்.
ஆனால்,  மக்கள்   விஜயகாந்த் நாக்கை துருத்தியதையும்   கோபப்பட்டதையும்  கேலிச்சித்திரமாக்கிவிட்டு…அந்தாளோட டெபாசிட்டையும் காலி செஞ்சாங்க.
விலையேற்றம் செய்த அம்மையாரே திரும்பவும் ஆட்சிக்கு வரவச்சாங்க. இப்படிப்பட்ட மக்களுக்குத்தான்  நல்ல தலைவன்  வேண்டுமாம்.
நல்லவன் யார்,  கெட்டவன் யார்என்பதைக்கூட நம்மால்   அடையாளம்கூட காண முடியவில்லை. திட்டமிட்டே குடிகாரன் என்று பரப்பினார்கள்.
திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுமே கேப்டனை திட்டமிட்டு ஒழித்தார்கள். கேலி செய்து மீம்ஸ் போட தனி டெக்னிகல் டீமையே உருவாக்கினார்கள்.
பொதுசபையில் கோபப்பட்ட  தங்கள் மீடியா கைக்கூலிகளை ஏவி விட்டார்கள். போகுமிடமெல்லாம் அவரை கோபமூட்டி அதை பதிவு செய்து டப்பிங் பேசி அவரை காமெடி பீஸ் ஆக்கினார்கள்.
நாமும் சேர்ந்து கேப்டனை பார்த்து சிரித்தோம். ஆனால், இரு கட்சிகளும் திட்டமிட்டு நடத்திய மீடியாக் கூத்தை எண்ணிப் பார்க்கவில்லை.
அவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரின் குடும்பம் உள்ளே வரவேண்டிய சூழல். கட்சியைக் கரைத்தார்கள்.
கரைக்க கேப்டன் மனைவியும் ஒரு காரணமாக இருந்தார். இன்று ஒரு நல்ல ஆண்மையுள்ள தலைவன் காணாமல் போனான்.
பட்ட பின் வருந்துவது தமிழர்களின் வழக்கம், பழக்கம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.