இந்திய பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக சன்ரைஸர்ஸ் அணியால் ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட முகமது சிராஜ், தனது கனவு நனவானதாக கூறுகிறார்.
இந்திய பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ரூ.2.6 கோடிக்கு சன்ரைஸர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டதன் மூலம் தனது கனவு நனவாகியுள்ளதாக கூறுகிறார் முகமது சிராஜ்.
ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு ஹைதராபாத், சென்னை, பஞ்சாப், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் அணியில் விளையாடுவதற்காக கைதேர்ந்த கிரிக்கெட் வீரர்களை கோடிக்கணக்கான பணம் செலுத்தி ஏலத்துக்கு எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு சீசனில் விளையாடுவதற்கான கடந்த திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஹைதரபாத்தைச் சேர்ந்த 22 வயதே ஆன முகமது சிராஜை ஏலம் எடுக்க சன்ரைஸர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சாலன்ஜர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் ரூ.20 லட்சத்துக்கு தொடங்கிய ஏலம் மிக அதிக பட்சமாக சென்று கொண்டே இருந்தது. இறுதியில் ரூ.2.6 கோடிக்கு ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் ஏலத்துக்கு வாங்கியது.
யார் இந்த சிராஜ்
ஹைதராபாத்தில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கவுஸ் முகமது என்பவரின் மகன் முகமது சிராஜ். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகனான சிராஜ், கிரிக்கெட்டில் வல்லவராவார்.
படிப்பில் ஆர்வம் இல்லை
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது: சிராஜ் ஒரே இரவில் கதாநாயகன் ஆகியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது மூத்த மகன் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். ஆனால் இளைய மகன் சிராஜுக்கோ படிப்பில் ஆர்வம் இல்லை. எப்போதும் கிரிக்கெட் விளையாடி கொண்டே இருப்பார்.
ஊக்கமாக உள்ளது
படிக்காமல் விளையாட்டில் மட்டும் ஆர்வமாக உள்ள சிராஜை நாங்கள் அவ்வப்போது கண்டிப்போம். எனினும் இதுபோன்ற நல்லது நடப்பதற்காகத்தான் என்று தற்போது புரிகிறது என்றனர். எந்தவித பயிற்சி நிலையங்களுக்கும் சென்று பயிற்சி எடுக்காமலேயே ஹைதராபாத் யு22 அணிக்கு விளையாடி வந்த சிராஜ் பல்வேறு கோப்பைகளை பெற்று குவித்துள்ளார். பிறகு கடந்த 2015-16-இல் நடைபெற்ற ராஞ்சி டிராப்பியில் முதல்முதலாக விளையாடினார்.
மிகப் பெரிய வீட்டில் தங்க வேண்டும்
அந்த சீசனில் நடந்த 9 மேட்சுகளில விளையாடிய அவர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். எனினும் ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டது மிகப் பெரிய ஊக்கத்தை அவருக்கு கொடுத்துள்ளது.
ஐபிஎல் ஏலம் குறித்து சிராஜ் கூறுகையில் சாதாரண சிறிய வீட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களை மிகப் பெரிய வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.