February 24, 2017
ரூ.251க்கு ஸ்மார்ட்ஃபோன் வழங்குவதாக அறிவித்த மோஹித் கோயல் கைது
2015ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோனை வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை ரூ.251க்கு வழங்குவதாக அறிவித்தது. இந்நிறுவனம் இதுவரை 30,000 வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன்களை விநியோகம் செய்திருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காசியாபாத்-ஐ சேர்ந்த அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் , ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தது.
அந்த புகாரில், அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் ஃப்ரீடம் 251 போன்களை விநியோகம் செய்ய கோயல் மற்றும் ரிங்கிங் பெல்ஸ் சார்பில் சிலரால் 2015 நவம்பரில் வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து ரிங்கிங் பெல்ஸ் தலைவர் மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவன தலைவர்கள் கூறுகையில்,
“நாங்கள் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு பலகட்டங்களாக ரூ.30 லட்சம் வரை வழங்கியுள்ளோம். ஆனால் அந்நிறுவனம் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்புடைய பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர்”, என்று தெரிவித்துள்ளனர்.
ரூ.251க்கு ஸ்மார்ட்ஃபோன் வழங்குவதாக அறிவித்த மோஹித் கோயல் கைது
Reviewed by மறத்தமிழன்
on
February 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.