February 1, 2017
வருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..!
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வருமான வரி விதிப்பு அளவுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
அதுவும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வருமான வரி தளர்வுகளை மக்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
மக்களின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை என்ற சொல்லவேண்டும்.
5 சதவீத தளர்வு
பட்ஜெட் 2017 நிதி அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையோருக்கான வருமான விரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வரி
மேலும் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான வருமான உடையவர்கள் 10 கூடுதல் வரியை செலுத்த வேண்டும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பிற அளவுகளில் எவ்விதமான மாற்றமுமில்லை என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வருமான வரி விதிப்பு
இந்தியாவில் தற்போது வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுவோர் எவ்விதமான வரியையும் செலுத்த தேவையில்லை.
250,001 முதல் 5,00,000 ரூபாய் வரையில் வருடாந்திர வருமானம் பெறுவோர் 10% வரியும், 5,00,001 முதல் 10,00,000 ரூபாய் 20% வரியும் மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் உடையோர் 30% வரி செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்கள்
மேலும் மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விதிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தற்போதைய அளவிடுகள் 2017-18 நிதியாண்டிலும் தொடரும்.
சேமிப்பு
இப்புதிய தளர்வுகள் மூலம் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் ஒருவர் வருடத்திற்கு 12,500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
மத்திய அரசு திட்டம்
இந்த வரி குறைப்பின் மூலம் வருமான வரியை அதிகப்படியானோர் செலுத்துவார்கள் என ஜேட்லி கூறினார்.
இதன் அரசின் வரி வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும் குறைந்த அளவிலாவது அதிகரிக்கும் என்பது மத்திய அரசின் கணக்கு
வருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..!
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.