February 28, 2017
ஜூலை 1-ஆம் தேதி முதல், நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல்!
ஜி.எஸ்.டி வரி சட்டத்தை அமல்படுத்த நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுமே ஒப்புக்கொண்டுவிட்டதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டமான ஜி.எஸ்.டி ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதிலும் அமலுக்கு வர உள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ். நுகர்வு வரிகள் பலவற்றையும் நீக்கிவிட்டு ஒரே வரியாக ஜி.எஸ்.டி அமலில் இருக்கும் என்றும், இது ஒரு கேம் சேஞ்சர் என்றும் அவர் வர்ணித்தார்.
ஜி.எஸ்.டி வரி சட்டத்தை அமல்படுத்த நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுமே ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
லண்டனில் இருந்து, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பாக பல்வேறு இடர்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து திரைகளும் விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தில் திருத்தம் தேவைப்பட்டது என்றும், அது செய்து
முடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த வாரம் கூறுகையில், ஜி.எஸ்.டி சட்டத்தை தொடர்ந்து உள்நாட்டு வணிகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இச்சட்டம் ஒரு வரம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஜூலை 1-ஆம் தேதி முதல், நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல்!
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.