February 16, 2017
இன்றைய பரபரப்பு செய்திகள் 16/02/17 !
எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார் அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
இன்று பிற்பகல் தேர்தல் ஆணையம் கூடி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருப்பது செல்லத்தக்கதுதானா என்பது பற்றி முடிவு செய்ய இருப்பதாக டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏக்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்.
கூடங்குளம் அணு மின் நிலைய முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
முதல்வராக மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜை நியமிக்க வேண்டும் – மார்க்கண்டேய கட்ஜு
முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை. மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
கூவத்தூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடந்த கோவையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு.
பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. தமிழகத்தில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன்.
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம்.
எனது முகநூல் பக்கத்தில் விரைவில் வெளிவருகிறது ‘கழகத்தின் கதை’. அதிமுகவில் நடந்த மாற்றங்கள் குறித்த பரபரப்பான தொடர் – டாக்டர்.ராமதாஸ்.
திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடத்தல்காரர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 26 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெர்மனியில் வசித்து வந்த சோபிகா என்ற அந்தப் பெண் தான் குடியிருந்த பகுதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அகதிகளாக வருபவர்களுக்கு உதவி செய்யும் பணியில் இருந்து வந்தார் அவர். நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு அகதிதான் சோபியாவைக் கொலை செய்ததாகக் கருதப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை தொடர்ந்து ஒன்பதாம் நாளாக தங்கவைக்கபட்டுள்ளனர் கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றவும் மக்கள் அதிகாரம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் அழைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வாலிபர் தூக்கு . குண்டு குறிக்கி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபாலப்பா மகன் இராமன் (20) காதல் தோல்வியால் தூக்கு போட்டு தற்கொலை.
இன்றைய பரபரப்பு செய்திகள் 16/02/17 !
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.