இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகன எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களை இயக்கும் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்களே 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்து வருகின்றன.

தற்போது பெட்ரோவில் விலை லிட்டருக்கு கிட்டதட்ட 80 ரூபாய் அளவுக்கு விற்கப்படுகிறது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை மிக மிக குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் 26 ரூபாய்க்கும், இலங்கையில் 36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மிகக்குறைந்த பட்சமாக இத்தாலியில் 14 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் விலை கண்ணை கட்டும் அளவுக்கு உள்ளது.
இந்தியாவில் பெட்ரோலின் அடிப்படை விலை 16.60 ரூபாய் மட்டுமே. அனைத்து வரிகளையும் சேர்த்தால் கூட 52 ரூபாய்தான் வருகிறது. ஆனால் விற்பனை செய்யப்படுவது 80 ரூபாய்க்கும் மேல். மீதிப்பணம் எல்லாம் எங்கே செல்கிறது. இதற்காக பொதுமக்கள் போராட்டம் நடத்தினால்தான் ஒரு முடிவு வரும் என எண்ண தோன்றுகிறது என பொதுமக்கள் நினைக்கின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.