Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

கூவத்தூரில் 144 தடை உத்தரவு


பதட்டமாக உள்ள கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி.

பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள கூவத்தூர் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சசிகலா சிறைக்குப் போகவுள்ளதால், அவர்களை மீட்க முதல்வர் ஓ.பி.எஸ் களம் குதித்துள்ளார். இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அங்கு பெருமளவில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டையும் போலீஸார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இந்தநிலையில் தற்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி பிறப்பித்துள்ளார்.
அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.