Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

மொத்தம் ரூ.130 கோடி அபராதம்.. ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் சொத்துக்களை விற்று பறிமுதல் செய்யும் கோர்ட்


ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட ரூ. 130 கோடி அபராதத்தை அவர்களது சொத்துக்களை விற்று கோர்ட் வசூலிக்கவுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்தம் ரூ. 130 கோடி அபராதத்தொகையை கோர்ட் வசூலிக்கவுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று கூறிய குன்ஹா அனைவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கில் தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கான சிறைத் தண்டனையை மட்டும் விட்டு விட்டு அபராதத் தொகையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதமும் அமலுக்கு வருகிறது. மற்றவர்கள் தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

தற்போது மொத்தம் உள்ள ரூ. 130 கோடி அபராதத்தையும் அவர்களிடமிருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களை விற்று அதிலிருந்து நீதிமன்றம் வசூலிக்கவுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.